Home இரகசியகேள்வி-பதில் Tamil sex Thakaval உடலுறவு சம்மந்தமான இளம் ஆண் பெண் தெரிந்து கொள்ளவேண்டியவை ?

Tamil sex Thakaval உடலுறவு சம்மந்தமான இளம் ஆண் பெண் தெரிந்து கொள்ளவேண்டியவை ?

764

teen age boy, teen girl kelvi, paruva penkal, penkal paaluravu kelvi,Body Scent For Sexual Attraction,aanmai kuraivukku ,pennin suyainpa kelvi,udal uravu inpam,Sex Therapy,ஆங்கிலத்தில் ‘ரிம்மிங் ஜாப்’ ‘ரிம் ஜாப்’ என்று குறிப்பிடப்படும் வாய்வழி குதப் புணர்ச்சி என்பது ஆசனவாயை முத்தமிடுதல், நக்குதல் அல்லது நாக்கை நுழைத்தல் போன்ற செயலைக் குறிக்கிறது.

அந்த பகுதியில் பல முக்கியமான நரம்பு முடிச்சுகள் உள்ளன, எனவே அந்த பகுதியில் நாக்கு படும்போது மிகவும் கிளர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இந்தப் பகுதி பாக்டீரியாக்கள் தங்கிப் பெருகும் முக்கியமான இடம், இந்த செயலால் நோய்கள் கூடப் பரவலாம்.

இதில் ஆபத்துகள் ஏதும் உள்ளதா? (What are the risks associated with Anilingus?)

உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றாமல் இவ்வகைப் புணர்ச்சியில் ஈடுபட்டால், பால்வினை நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இதில் ஈடுபடுபவர்களுக்கு ஈறுகளில் இரத்தக் கசிவு, திறந்திருக்கும் காயங்கள், மூல நோய் அல்லது பிற பால்வினை நோய்கள் இல்லாதபட்சத்தில் இதனால் ஏற்படும் அபாயங்கள் மிகக் குறைவுதான்.

பிற பால்வினை நோய்கள் இருந்தால் அல்லது உங்களுக்கோ உங்கள் இணையருக்கோ எச். ஐ. வி. நிலை என்ன என்பது தெரியாமல் இருக்கும்பட்சத்தில், அபாயம் மிக அதிகம்.

நீங்கள் ஒருவருடனே நீண்ட காலமாக பாலியல் உறவில் இருந்து வருகிறீர்கள் எனில், உங்களுக்கும் உங்கள் இணையருக்கும் ஆசனவாய்ப் பகுதியிலும் குடல் பகுதியிலும் ஒரே வகையான பாக்டீரியாக்களே இருக்கலாம். ஆகவே அபாயங்கள் குறைவு. ஆனால் புதிய ஒருவரிடம் இதைச் செய்யும்போது ஆபத்து அதிகம்.

இவ்வகைப் புணர்ச்சியின்மூலம் பின்வருபவை போன்ற நோய்த்தொற்றுகள் பரவக்கூடும்:

வெட்டை நோய்
சிவிலிசு நோய்
கிளமீடியா
படர்தாமரை (ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் 1 & 2)
இனப்பெருக்க உறுப்பு மருக்கள் (ஹியூமன் பாப்பிலோமாவைரஸ்)
ஹெப்படைட்டஸ் A
ஹெப்படைட்டஸ் B
ஹெப்படைட்டஸ் AC
எ. கோலை
ஒட்டுண்ணிகள் (அமீபியாசிஸ், ஜியார்டயாசிஸ் போன்றவை)
இந்த அபாயங்களை எப்படிக் குறைப்பது? (What are the risks associated with Anilingus?)

தடுப்பு முறையைப் பயன்படுத்தலாம்: டென்டல் பாம், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தலாம் அல்லது இதில் ஈடுபடும் முன்பு ஓர் ஆணுறையை வெட்டி ஆசனவாய்ப் பகுதியில் வைக்கலாம்.
உங்கள் வாய் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்: வாயில் அல்லது வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் காயங்கள் இருந்தால், ஈறுகளில் இரத்தக்கசிவு இருந்தால், திறந்திருக்கும் காயங்கள் இருந்தால், பால்வினை நோய்த்தொற்றுகள் வரும் அபாயத்தைக் குறைப்பதற்காக வாய்வழிக் குதப் புணர்ச்சியைத் தவிர்ப்பது நல்லது.
முன்னதாக, ஆசனவாயை சுத்தம் செய்யவும்: ஆசனவாய்ப் பகுதியில் மிகச்சிறு அளவில் மலம் இருக்கக்கூடும். மென்மையான சோப்பு போட்டு ஆசனவாயைக் கழுவவும், பிறகு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்யவும். ஆசனவாய்ப் பகுதியில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தாத மென்மையான தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அப்படி அரிப்போ வெட்டுக் காயமோ ஏற்பட்டால் அதனால் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆசனவாயிலிருந்து இனப்பெருக்க உறுப்பை நோக்கிச் செல்ல வேண்டாம்: சிலர் பெண்ணுறுப்பில் வாய்வழிப் புணர்ச்சி செய்வார்கள் அல்லது ஆணுறுப்பைக் கொண்டு வாய்வழிப் புணர்ச்சி செய்வார்கள். இப்படிச் செய்வதால் ஆசனவாய்ப் பகுதியில் இருக்கும் பாக்டீரியா இனப்பெருக்க உறுப்புப் பகுதிக்கு வந்து சிறுநீர்ப் பாதையை அடைந்து அங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.
மவுத்வாஷ் பயன்படுத்தலாம்: ரிம்மர், அதாவது வாயைப் பயன்படுத்துபவர், செயலில் ஈடுபட்ட பிறகு மவுத் வாஷ் பயன்படுத்துவதன் மூலம் வாயை வந்தடைந்த பாக்டீரியாக்களை அகற்றலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
தடுப்பூசி: ஹெப்படைட்டஸ் A, ஹெப்படைட்டஸ் B ஆகிய தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசிகள்: ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் தடுப்பூசியும் உள்ளது.
வாய்வழி குதப் புணர்ச்சியின் போது ஆசன வாய்ப்பகுதியில் இருக்கும் உணர்திறன் மிக்க நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு மிகுந்த இன்பம் கிடைப்பதால், பலருக்கு இந்த வாய்வழி குதப் புணர்ச்சி பிடிக்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆசனவாய்ப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. இதனால், கூடுதல் இன்பம் கிடைக்கும். எனினும், பால்வினை நோய்த் தொற்றுகள், பிற குடல் நோய்த்தொற்றுகள் அல்லது பிற பிரச்சனைகளைத் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

பாத காமம் என்றால் என்ன? (What is Foot Fetishism?)

அடையாளக் காமம் (ஃபெட்டிஷிசம்) என்பது வழக்கத்திற்கு மாறான பாலியல் கோளாறாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது தீவிரமான பாலியல் ஈர்ப்பும் பாலியல் கிளர்ச்சியூட்டும் கற்பனைகளும் இருக்கும்.

பாத காமம் (FF), பாத ஈர்ப்பு, பாத மோகம் அல்லது போடோஃபிலியா எனப்படும் இந்தப் பிரச்சனை முன்பு ‘பாலியல் வக்கிரம்’ எனக் கருதப்பட்டது. பாத காமம் என்பது பாதம் அல்லது காலணிகள் மீது ஒருவருக்கு தீவிரமான காம ஈர்ப்பு இருப்பதாகும். அடையாளக் காமத்தின் மிகப் பொதுவான வகை பாத காமம் எனப்படும் இந்தப் பிரச்சனையே ஆகும். பெரும்பாலும் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் உள்ளது.

இந்தக் கோளாறுள்ள நபருக்கு பாதம் மற்றும் விரல்களின் வடிவம், அளவு மீது மிகுந்த காம ஈர்ப்பு இருக்கும். உதாரணமாக நீண்ட அல்லது குட்டையான கால் விரல்கள், பாலிஷ் போட்ட கால்விரல் நகங்கள், அதிக வளைவுள்ள பாதம், உள்ளங்கால் போன்றவற்றின் மீது இவர்களுக்கு அதிக ஈர்ப்பு இருக்கும்.

இவற்றின் மீதும் ஈர்ப்பு இருக்கலாம் (The attraction may also be towards):

காலில் அணியும் ஆபரணங்கள் (மெட்டி, காலில் அணியும் மோதிரங்கள், கொலுசுகள், பிரேஸ்லெட் போன்றவை)
ஆடை அணிந்திருக்கும் விதம் (வெறும் பாதம், சேன்டல்ஸ், ஃபிளிப் ஃபிளாப், ஹை ஹீல்ஸ் போன்றவை)
பராமரிக்கும் செயல்கள் (கால் விரல் பராமரிப்பு அல்லது மசாஜ் செய்தல்)
துர்நாற்றம் மற்றும் உணரும் செயல்கள் (உதாரணமாக, பாதத்தை முகர்ந்து பார்த்தல், நக்குதல், முத்தமிடுதல், கூச்சமூட்டுதல், கடித்தல் போன்றவை)
பாத காமப் பிரச்சனை உள்ளவர்களில் பெரும்பாலான ஆண்களுக்கு, பெண்களின் ஷூக்கள் மீது அதிக ஈர்ப்பு இருக்கும், அவற்றைப் பார்த்தே அவர்கள் பாலியல் கிளர்ச்சி அடைவார்கள் (குறிப்பாக ஹை ஹீல்ஸ் ஷூக்கள்), சிலர் தங்கள் பாலியல் கற்பனைகளிலும் ஃபோர்பிளே செய்யும்போதும் ஹை ஹீல்ஸ் ஷூக்களையும் பயன்படுத்துவார்கள்.

எனினும், பாத காமம் என்பது கெடுதலற்றது, இதுவும் காலின் மீதும் மார்பகங்கள் மீதும் ஆண்களுக்கு இருக்கும் ஈர்ப்பைப் போன்றதே தான்.

இது சாதாரணம் தானா? (Is it normal?)

இது இயல்புக்கு மாறான நடத்தையாகத் தெரிந்தாலும், இது சாதாரணமான நடத்தை தான்.

இதற்கான காரணங்கள் என்ன? (What are the Causes?)

காரணம் என்ன என்று தெளிவாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும், பின்வருபவற்றால் இந்த நடத்தை ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்களும் உளவியல் நிபுணர்களும் கருதுகின்றனர்:

ஆய்வு செய்தவர்களின் கருத்துப்படி, இந்த விதமான பாலியல் இன்பங்கள், கிளர்ச்சிகள் அவர்களின் பருமடையும் காலத்தில் தொடங்கியிருக்கும். அந்த சமயத்தில் அவர்களின் ஹார்மோன்களின் அளவு மிக அதிகமாக இருந்திருக்கும், இதனால் பல்வேறு பொருள்கள் மீதும் அவர்கள் ஈர்ப்படைந்து அவற்றைக் கொண்டு கிளர்ச்சி அடைவதுண்டு. அது போன்றே சிலருக்கு பாதத்தின் மீதும் பாலியல் ஈர்ப்பு அதிகரித்திருக்கலாம்.
நரம்பியல் நிபுணர் விளையனூர் சு. ராமச்சந்திரன் என்பவர், மூளையின் மேற்பரப்பில் ஒன்றுக்கொன்று அருகருகில் அமைந்துள்ள பாதத்திர்கான உணர்ச்சிப் பகுதிக்கும் இனப்பெருக்க உருப்புக்கான உணர்ச்சிப் பகுதிக்கும் இடையே நடக்கும் வழக்கத்திற்கு மாறான தற்செயலான தகவல்பரிமாற்றத்தின் காரணமாகவே இந்த நடத்தை உருவாகிறது எனக் கருதுகிறார்.
உளவியல் நிபுணர்கள், ஒருவரின் சிறு வயதில் பிறரின் பாதத்தால் மிதிபட்டிருந்தால் அல்லது கூச்சமூட்டப்பட்டிருந்தால் அது அவரது மனதில் ஆழப் பதிந்து வாழ்நாள் முழுதும் இப்படிப்பட்ட நடத்தையாக வெளிப்படலாம். எதிர்காலத்தில் அவர்கள் பாத காம நடத்தை உள்ளவர்களாகலாம் என்கின்றனர்.
பாத காமப் பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? (What do Foot Fetishists do?)

சில நிபுணர்கள், பாத காமப் பிரச்சனை உள்ளவர்களை அவர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் இரண்டு வகையினராகப் பிரித்துள்ளனர்:

அழகியல் நடத்தை உள்ளவர்: இணையரின் பாதத்தை முத்தமிடுவார்கள், நக்குவார்கள், தடவிக் கொடுப்பார்கள், கொஞ்சுவார்கள்.
நேரடி பாலியல் நடத்தை உள்ளவர்கள்: பாலியல் உந்துதல் உள்ளவர்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்பை தங்கள் இணையரின் பாதத்தில் தேய்ப்பார்கள், சிலசயம் பாலுறவின் உச்சக்கட்டத்தை பாதத்தின் மீதே நிகழச் செய்வார்கள்!
இதை எப்படிச் சமாளிப்பது? (How is it managed?)

பாத காமப் பிரச்சனை உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் பாலியல் வாழ்க்கை இயல்பாகவே இருப்பதால் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களின் இணையர்களுக்கு இது பிடிக்காவிட்டால் சிகிச்சை தேவைப்படலாம்.
அறிவாற்றல் சார்ந்த நடத்தைக்கான சிகிச்சை (CBT): பாத காம நடத்தையை ஓரளவு சரிசெய்ய இந்த சிகிச்சை பலனளிக்கிறது.
குறிப்பு: பாத காமப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அதன் காரணமாகவே பால்வினை நோய்த்தொற்றுகள் வர வாய்ப்பில்லை. எனினும், பாதத்தில் வியர்க்கும் பிரச்சனை (அத்தலேட் ஃபுட்) வர சிறிது வாய்ப்புள்ளது.