Home ஆரோக்கியம் பொது மருத்துவம் இருமலைத் தடுக்க 8 வழிகள் (8 Ways Of Preventing Cough)

இருமலைத் தடுக்க 8 வழிகள் (8 Ways Of Preventing Cough)

23

இருமல் என்பது நமது சுவாச மண்டலத்தில் சுரக்கும் பொருள்களை வெளியேற்ற உதவும் ஒரு இயல்பான செயலாகும். ஆனால் தொடர்ந்து இருமல் வந்துகொண்டே இருந்தால் சிரமமாக இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 கோடி மக்கள் இருமல் காரணமாக மருத்துவர்களிடம் செல்வதாகத் தெரிகிறது (மக்கள் மருத்துவரிடம் செல்வதற்கான பிரதானமான காரணமாக இருமல் உள்ளது எனலாம்). ஜலதோஷம் வந்து போன பிறகு வறட்டு இருமல் மிகவும் கொடுமையாகும். அது சில வாரங்கள் முதல் சிலசமயம் ஓரிரு மாதம் வரையும் தொடரக்கூடும். நாள்பட்ட இருமல் வராமல் தடுக்க ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி அவசியம்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள் (The Causes of Cough)

நோய்த்தொற்றுகள், தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, சுற்றுச்சூழலில் இருந்து உடலுக்குள் நுழையும் எரிச்சலை ஏற்படுத்துகின்ற பொருள்களில் இருந்து உடலைப் பாதுகாப்பதற்கான இயற்கையான பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இருமல் உண்டாகலாம். எனினும், இருமலுக்கான பொதுவான காரணம் ஜலதோஷமும் இன்ஃபுளுயன்சா காய்ச்சலுமாகும். இந்த இரண்டு சூழ்நிலைகளில் உடலானது சளியின் மூலம் வெளிப் பொருள்களை வெளியேற்ற முயற்சிக்கிறது. மூக்கின் பின்புறமிருந்து சளி ஒழுகுதல், நெஞ்செரிச்சல், மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவையும் இருமல் உண்டாகப் பிற காரணங்களாகும்.

இருமலைத் தடுக்கும் முறைகள் (Methods of Cough Prevention)

இருமலைத் தடுப்பதற்கான சில வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

1. கைகளை நன்றாகக் கழுவி கிருமிநீக்கம் செய்ய வேண்டும் (Wash and sanitise your hands):

கைகளை நன்றாகக் கழுவதன் மூலமே, நோய்த்தொற்றுகள் வராமல் எளிதாகத் தடுக்கலாம். ஹேன்ட் வாஷ் பயன்படுத்தி கைகளை நன்றாகக் கழுவுவதால் பொதுவான நோய்த்தொற்றுகள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். சுத்தமாக இருப்பதே ஜலதோஷம் மற்றும் பிற எந்த நோயும் வராமல் தடுப்பதற்கான முதல் படியாகும்.

2. சுவாசமண்டல நோய்த்தொற்றுகள் உள்ளவர்களைத் தொடாமல் பார்த்துக்கொள்ளவும் (Avoid contact with people suffering from respiratory infections):

சுவாசமண்டல நோய்த்தொற்று இருப்பவரிடம் கைகுலுக்குவது, ஒரே தட்டில் இருக்கும் உணவைப் பகிர்ந்து உண்பது போன்றவற்றால் நோய்த்தொற்று பரவக்கூடும். உடல்நிலை சரியில்லாதவரிடம் இருந்து பாதுகாப்பான தொலைவு தள்ளி இருப்பதே நல்லது.

3. உடைகளையும் பயன்படுத்தும் தனிப்பட்ட பொருள்களையும் கிருமிநீக்கம் செய்யவும் (Disinfect the clothes and personal linings):

உங்கள் உடைகளை அடிக்கடித் துவைப்பது போலவே, நீங்கள் பயன்படுத்தும் டவல், படுக்கை விரிப்புகள், போர்வைகள் போன்றவற்றையும் துவைக்க வேண்டும். இதனால் தூசி போய்விடும். படுக்கை, போர்வை போன்றவற்றில் இருக்கும் தூசியில் பல்வறு பாக்டீரிய வித்துகள் இருக்கும். முழுமையாக இவற்றை கிருமிநீக்கம் செய்ய, ஒரு சில சொட்டு (டெட்டால் போன்ற) ஆன்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தவும். அழுக்காகும் அளவைப் பொறுத்து, அடிக்கடி துவைக்கவும்.

4. நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க, திரவ ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும் (Increase your fluid consumption to avoid dehydration):

போதுமான அளவு நீர் பருகுவதன் மூலம், சளி மெல்லியதாக இருக்கும், இதனால் சளி எளிதில் வெளியேறும். சளி எளிதில் வெளியேறும் வகையில் மெல்லியதாக இருந்தால் இருமல் குறையும். வழக்கமாக ஒரே நீரைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு நீர் வகைகளைப் பயன்படுத்தவும். டேட்டாக்ஸ் நீர் பயன்படுத்தலாம் அல்லது நீங்களே செல்ட்சர் ரெஃப்ரெஷர் பயன்படுத்தலாம்.

5. வீட்டிலேயே இருங்கள் (Stay at home):

உடல்நிலை சரியில்லை என்றால் அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலேயே இருங்கள். குழந்தைகளும் இதுபோன்ற சமயங்களில் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பள்ளியிலோ வேலை செய்யும் இடத்திலோ பிறருக்கு நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு மிக அதிகமாகும்.

6. தடுப்பூசி (Get vaccinated):

கக்குவான் தடுப்பூசி (பெர்ட்டூசிஸ் வேக்சின்), கக்குவான் இருமல் வருவதைத் தடுக்க உதவக்கூடும். உங்களுக்குக் குழந்தை இருந்தால், குழந்தைக்கு மட்டும் தடுப்பூசி போடுவது போதாது, நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கக்குவான் தடுப்பூசி பெற்ற பிறகும், கக்குவான் இருமல் வர வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

7. உங்கள் முகத்தை அடிக்கடித் தொடுவதைத் தவிர்க்கவும் (Avoid frequent touching of your face):

நோய்த்தொற்று உள்ள திரவத் துளிகள் உள்ள மேசை, புத்தகங்கள் போன்றவற்றைத் தொட்டுவிட்டு, முகம், கண்கள், மூக்கு, வாயை மீண்டும் மீண்டும் தொட்டால் இருமல் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.

8. புகைபிடிப்பவரின் அருகில் இருப்பதைத் தவிர்க்கவும் (Stop passive smoking):

எந்த வகையிலும் புகையிலையைப் பயன்படுத்துவது சுவாசக்குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் வறட்டு இருமல் உண்டாகலாம். புகைபிடிப்பவரின் அருகில் இருந்து அந்தப் புகையை சுவாசிப்பதால் ஆஸ்துமா மற்றும் பிற சுவாசமண்டலப் பிரச்சனைகள் உண்டாகலாம். புகைப்பழக்கத்தை விட, நிக்கோடின் மாற்று சிகிச்சை உதவக்கூடும்.