Home ஆரோக்கியம் இந்த காரணங்களால் தான் மாதவிலக்கு தள்ளிப்போகின்றதாம்…!!

இந்த காரணங்களால் தான் மாதவிலக்கு தள்ளிப்போகின்றதாம்…!!

28

பொதுவாக 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் மாதவிலக்கு வருகிறது என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதுவும் 40 நாட்களுக்கு மேல் அல்லது வராமல் நின்று விடுகிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஒரு சில காரணங்களால் மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போக கூடும்.

அதிக மன அழுத்தம் காரணமாக ஹார்மோனில் சுரப்பு குறைகிறது, இதனால் கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது தாமதம் ஆவதால் மாதவிலக்கு தாமதமாகலாம்.

திடீரென உடல்நிலை சரியில்லாமல் போவது அல்லது ஏதேனும் நோயின் வெளிப்பாடாக கூட மாதவிலக்கு தள்ளிப் போகலாம்.

பகல் ஷிப்ட், நைட் ஷிப்ட் என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிலக்கு சுழற்சியும் மாறுவதை உணர முடியும்.

நீங்கள் மருந்து ஏதேனும் உட்கொண்டு வந்தால், அதன் பக்கவிளைவாக கூட மாதவிலக்கு தள்ளி போகலாம், ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிலக்கு சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும்.