Home பாலியல் ஆரோக்கியமான செக்ஸ் தம்பதியிடையே மிகுந்த நெருக்க‍த்தை உருவாக்குகிறது – சுவாரஸ்யமான சில ஆய்வு முடிவுகள்

ஆரோக்கியமான செக்ஸ் தம்பதியிடையே மிகுந்த நெருக்க‍த்தை உருவாக்குகிறது – சுவாரஸ்யமான சில ஆய்வு முடிவுகள்

34

imagesசெக்ஸ் பற்றி பேசாத ஊடகங்களே இல்லை. நாளிதழ்களில் டல்ல டித்தால் செக்ஸ் பற்றி ஆய்வு வெளியிடுவதும், டி.ஆர்.பி ரேட் டிங்கிற்காக பிரபல மருத்து வர்களை வைத்து தாம்பத்ய உற வுமுறை குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதும் வாடிக் கைதான். செக்ஸ் பற்றி பல் வேறு ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன. சுவாரஸ்யமான சில ஆய்வு முடிவுகள் உங்களுக்காக.
முடிவில்லா மகிழ்ச்சி
செக்ஸ் என்பது ஒரு வகையான பசி! வயிற்றுக்கும் பசிக்கும் போது தீனி போடுவதைப் போல உடலுக்கு பசிக்கும் போது அதற் கும் தீனி போடவேண்டியது அவ சியம் என்று பிரபல மருத்துவர் கள் கூறியுள்ள னர். எனவேதான் இறக்கும் வரை வயிற்றுப் பசிக்கு எவ்வாறு உணவு கொடுக்கிறோ மோ அதேபோல் உட ல் பசியை ஆரோக்கியமாக தீர்க்க வேண்டி யது அவசியம் என்கிறது ஒரு ஆய்வு
2007ம் ஆண்டு இங்கிலாந்தில் நடை பெற்ற ஆய்வு ஒன்றில் இளம் வயதினரை விட 75 முதல் 85 வயதானவ ர்கள்தான் மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பெண்களை மகிழ்விக்கும் செக்ஸ்
தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கை யில் மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறார்களாம். அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடுபவதால் மகிழ்ச்சி யாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருப்பதால் அதிகம் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிறார் களா என்பது தெரிய வில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! இதைத் தவிர ஒரு பெண்ணின் திருப்தியி ல்லாத செக்ஸ் வாழ்க்கை, அப் பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுக ளையும், தன்னம்பிக்கையை யும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!
வாசனையால் கவரும் தன்மை
செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாச மான வாசனையைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர் வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெ ண்ணால இனம் காண முடியும் என்கிறது நரம்பியல் தொடர் பான மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வ றிக்கை!
ஆண்களுக்கு ஆயுள் அதிகம்
தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஆண்க ளை விட பெண்களுக்கே அதிகம் இருக்கி றதாம்.
55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக் கொ ண்டால், தாம்பத்ய உறவில் ஈடுபா டு ஆண்களுக்கு மேலும் 15 வருட ங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள் தானாம்! அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்துள்ளது.
குற்ற உணர்ச்சி
செக்ஸ்துரோகம் என்பது அடிப்ப டையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்!
செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண் களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும் / ஏமாற்றுதல், பெண்களின் குற் ற உணர்ச்சி ஒரு சமுதாய கட் டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற் படுகிறது என்று கண்டறியப்ப ட்டுள்ளது!
சரியான வாழ்க்கைத்துணை
தனக்கு சரியான வாழ்க்கைத் துணையை, தன் இயற்கை உணர்வு களின் அடிப்படையில் தேர்ந் தெடுக்கும் வரை ஒரு பெண் பொறுத்திரு க்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பதுதா ன் போட்டிக்கு /சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கி றது ஒரு ஆய்வு!
புற்றுநோய் பாதிப்பு
தங்களின் 20, 30 வயதுகளில் தாம்பத்ய உறவில் மிகுந்த ஆர் வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலை க்கழக ஆய்வு! ஆனால், அதே வாய்ப்பான து, வயதாக ஆக குறைகிற தாம். அதைவிட முக்கியமா க, ஒருவரின் 50 வயதிலும் அதற்கும் பின்னுமான தாம் பத்ய உறவு செயல்பாடுகள் சிறிதள வேனும், அது ப்ரா ஸ்டேட் சுரப்பி புற்று நோ யிலிருந்து ஒரு மனிதனை காக்கி றதாம்!
உச்சக்கட்ட புள்ளி
“ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி என்பது ஒன்று இருக்கிறாதா என் பது பெரு ம்பாலோனோர் கேட்கும் கேள்வி. ஆனால் அந்த புள்ளி ஒரு கற்ப னையான ஒன்னு, அப்படி யே இருந்தாலும் அது தனி மனித சம்பந்தப்பட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்!
ஆன்மீகத்தோடு தொடர்புடையது
ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண் டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன் மீகத்தின்பால் ஆர்வ முடைமையானது இருவருக்கி டையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப் படை யாகிறது என்கிறது ஆய்வு!