Home சமையல் குறிப்புகள் ஆந்திரா ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு குழம்பு

30

தேவையான பொருட்கள் :

மட்டன் நல்லி எலும்பு – 20
பெரிய வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 5
தயிர் – 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – 1 கைப்பிடி
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – சிறிது
கிராம்பு – 5
ஏலக்காய் – 4
பிரிஞ்சி இலை – 2.

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டன் நல்லி எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் மட்டன் நல்லி எலும்பை சேர்த்து பிரட்டவும்.

கறி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 12 விசில் போடவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுப்பை மிதமாக எரியவிட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சூப்பரான மட்டன் நல்லி எலும்பு குழம்பு ரெடி.