Home ஆண்கள் ஆண் குறி (Penis) சில தவறான எண்ணங்களும் விளக்கமும்

ஆண் குறி (Penis) சில தவறான எண்ணங்களும் விளக்கமும்

196

images66எண்ணம். ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
விளக்கம். ஆணுறுப்பின் அளவிற்கும் கலவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.
எண்ணம். விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
விளக்கம். விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்எண்ணம். கல் மாதிரி கடினமாக இருக்க வேண்டும்.
விளக்கம். ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி கடினமாக மாறும்
எண்ணம். விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
விளக்கம். விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் உடலியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.எண்ணம். ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
விளக்கம். ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக சிறுநீர் கழித்தால் எவ்வளவு சக்தி யாகுமோ அவ்வளவு தான் ஆகும். இது மிகவும் சாதாரனமான விஷயம்.
எண்ணம். சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
விளக்கம். சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள்)
எண்ணம். இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது ஆண்மை குறைவின் அறிகுறி.
விளக்கம். சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. டம்ளரில் தண்ணீர் அதிகம் ஊற்றினால் நிரம்பி வழியும் அல்லவா, அதைபோலதான் இதுவும்.
எண்ணம். ஆண் எந்நேரமும் கலவிக்கு தயாராக இருப்பான்.
விளக்கம். காமம் என்பது இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
எண்ணம். எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
விளக்கம். ஒரே நேரத்தில் சிறுநீறும் மலமும் கழிக்க முடியுமா.?இருப்பது ஒன்று மட்டுமே என்பது நினைவில் கொள்ளவும்
எண்ணம். ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
விளக்கம். கலவு என்பது ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய ஈடுபாடு இல்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது
எண்ணம். முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
விளக்கம். சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும்.

பாலியல் குறைபாடுகள் ஆண்குறியில் இருந்து தொடங்குவதில்லை அது உணவு திட்டம் முறையில்லாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இருந்து தொடங்கு கிறது முறையான உணவு திட்டங்கள் இரத்தம் எந்த அளவிற்கு ஆண்குறியில் பாய்கிறதோ அந்த அளவிற்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை இருக்கும் ஆக உடலில் ஆற்றலுக்கும் பாலுறவிற்கும் இருக்கும் நேரடி உறவை எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை . சில காரணங்களினால் தளர்ச்சி அடைய கூடும் சிலருக்கு ஆண்குறி மிகவும் சிறுத்து இருக்கும் இவற்றை முறையான சித்த மருத்துவத்தில் குணமாக்க இயலும் என மருத்துவ குறிப்புகள் உண்டு என்றாலும் உங்கள் பக்கத்தில் உள்ள நேர்மையான சித்த மருத்துவரை அணுகினால் இவற்றிக்கு முறையான தீர்வு அளிப்பார் அவரிடம் நேர்மை இருக்க வேண்டும் என்பது நமது அவா அதேவேளை தளர்ச்சி அடைந்து இருந்தாலும் சிறுத்து இருப்பதற்கும் மருத்துவ குறிப்பு ஒன்றை நாம் தர வேண்டியது ( இங்கு எவரையும் ஏமாற்றாமல் ) கடமையாகிறது எட்டி(இது நச்சு தன்மை கொண்டது ஹோமியோபதியில் நக்ஸ் என்ற மருந்து செய்கிறார்கள் ) கொட்டை,வசம்பு இவற்றை முறைப்படி தூய்மையாக்கி பாலில் அரைத்து இரவில் பூசிவர ஆண்குறி பருத்து விம்மி புடைக்கும் என ஒரு மருத்துவ குறிப்பு உண்டு இதையும் மருத்துவரின் பார்வையில் செய்வது நல்லது .அதேபோல ஆண்குறி உறுதியாகவும் பருககவும் வராகிக் கிழங்கு பால்முதுக்கன் கிழங்கு , பூனைக்காலி வித்து இவற்றை முறைப்படி தூய்மையாக்கி தூளாக்கி பாலில் எடுக்க நல்ல பலனை எதிர்பார்க்கலாம்