Home ஆண்கள் ஆண்மை குறைபாடா? கவலைய விடுங்க

ஆண்மை குறைபாடா? கவலைய விடுங்க

17

பொதுவாக கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் நாம் சில சத்தான காய்களை ஒதுக்குகிறோம்.
அதிலும் சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள், ஆனால் சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளது.
நீர்சத்து 96.07 %,
இரும்புச் சத்து 3.2%,
தாது உப்பு 0.5 %,
பாஸ்பரஸ் 0.2%,
புரதம் 0.3%,
கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சிறுநீரக பிரச்சனையை தவிர்க்க
சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம்.
சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

நீரிழிவு நோயிலிருந்து விடுதலை
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரிலிட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும்.
மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்

தலைவலிக்கு டாட்டா
வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

நல்லா தூங்க சூப்பர் மருந்து
இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சுரைக்காயின் சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து தலைமுடியில் தடவி மஜாஜ் செய்து வர தூக்கம் கண்களை தழுவும்.

ஆண்மையை அதிகரிக்க
சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு.
சுரைக்காயின் சதைப் பகுதியுடன் விதைகளையும் சேர்த்து, சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.