Home ஆண்கள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??

ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??

34

01ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??

போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்

ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள்

எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை வைத்து

அவர்
ஆண்மை உள்ளவரா – பொட்டண்ட் Potent
ஆண்மையற்றவரா – இம்பொட்டண்ட் Impotent
என்று கூறலாம்

அதே போல் ஒருவரால் தந்தையாக முடியுமா இல்லையா என்பதை வைத்து
பெர்டிலிட்டி – Fertilily
மலட்டுத்தன்மை ஸ்டெரிலிட்டி – Sterilily
என்று பிரிக்கலாம்

இது இரண்டும் தனி தனி அம்சங்கள்

உதாரணமாக
கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்களையும்
பேனா, பென்சில் என்று இரு பொருட்களையும் வைத்துக்கொண்டால்

கருப்பு பேனா
வெள்ளை பேனா
கருப்பு பென்சில்
வெள்ளை பென்சில்

என்று நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை போல்

ஆண்மை, ஆண்மையின்மை, மலடு, மலடில்லை என்று பார்த்தால்

ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம். Potent and Fertile
ஆண்மை குறைவு, தந்தையாகலாம். Impotent and Fertile
ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது. Potent, but sterile
ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது. Impotent, Sterile
என்று நான்கு பிரிவுகள் வரும்

ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம்
இதில் தான் பெரும்பாண்மையானவர்கள் உள்ளார்கள் என்பதால் இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை யில்லை என்று நினைக்கிறேன்

ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடமும், 12ஆம் இடமும் பாதிப்பில்லாமல் இருந்தால் இவ்வாறு இருக்கும்

ஆண்மை குறைவு, தந்தையாகலாம்
இதிலும் பலர் உள்ளனர். இந்த ஆண்மைக்குறைவு என்பது பெரிய தலைப்பு என்பதால் (வாசகர்களின் ஆதரவு இருந்தால்) சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பகுப்பில் இருப்பவர்களாம் தாம்பத்திய உறவில் ஈட்பட முடியாமை, சிரமம் ஆகியவை இருக்கும்

இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்தால் போதும்

வயகரா, சிட்டு குருவி லேகியம், அல்வா !!! ஆகியவை இங்கு உதவும்

நண்பர்கள் விருப்பப்ட்டால் (ஆபாச எழுத்தாளர் என்ற பெயர் வருமோ என்று பயம் தான் 🙂 🙂 ) விரிவாக எழுதலாம்

ஒருவருக்கு ஜாதகத்தில் 5ஆம் இடம் நன்றாக் இருந்து 12ஆம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி நடக்கலாம்

இதில் பெரும்பாண்மையான நோய்களுக்கு பூரண குணமடையும் சிகிச்சை உள்ளது.

ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது
இது தான் மிக முக்கியமான் விஷயம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற விபரமே நாட்டில் பலருக்கும் தெரியாது.

இவர்கள் தங்களிடம் குறை உள்ளது என்று தெரியாமல் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போவர்கள்

இந்த நிலைக்கு பல காரணங்கள்

இதில் சில நோய்களுக்கு சிகிச்சை உண்டு. சில நோயக்ளுக்கு கிடையாது

ஒருவருக்கு ஜாதகத்தில் 12ஆம் இடம் நன்றாக இருந்து 5ஆம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி நடக்கலாம்.

முக்கிய குறிப்பு : கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் இந்த வகையில் சேருவார்கள். கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை குறையாது

ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது

இது பல காரணங்களினால் வரும் .

அனைத்தும் மருத்துவ பெயர்கள் என்பதால் உங்களை குழப்ப விரும்பவில்லை

ஒருவருக்கு ஜாதகத்தில் 12ஆம் இடமும் பாதிக்கப்படு 5ஆம் இடமும் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி நடக்கலாம்.

தவறிருந்தால் வாத்தியார் மன்னிக்கவும் 🙂 🙂