Home ஆண்கள் ஆண்குறியில் பருக்கள் ஏற்படுவது எதனால்? அதற்கான தீர்வு என்ன?

ஆண்குறியில் பருக்கள் ஏற்படுவது எதனால்? அதற்கான தீர்வு என்ன?

41

23nov18பருக்கள் முகத்தில் வருவதால் தான் அதை முகப்பரு என்றே கூறுகிறோம். ஆனால், சிலருக்கு, மார்பு, தோள்பட்டை, முதுகில் கூட பருக்கள் வருவது உண்டு. இது அவரவர் உடல் மற்றும் சரும நிலையை பொருத்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சிலருக்கு ஆண்குறியில் கூட பருக்கள் ஏற்படுவது உண்டு. கூச்சத்தின் காரணாமாக சிலர் வெளியே கூறுவது இல்லை. சிலர் பயத்தின் காரணமாக மருத்துவரை அணுகுவதில்லை. ஆனால், இவ்வாறு ஆண்குறியில் பருக்கள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்…

எண்ணெய் சுரப்பிகள்

இதுப் போன்று ஆண்குறியில் பருக்கள் வரக் காரணம் எண்ணெய் சுரப்பிகள் தான் என்று கூறப்படுகிறது. இதில் ஏற்படும் குளறுபடியால் தான் ஆண்குறியில் புடைத்திருப்பது போன்ற பருக்கள் தோன்றுகிறது.

மயிர்க்கால்கள் அழற்சி

ஆண்குறியில் மயிர்கால்கள் பகுதியில் சரும அழற்சி ஏற்பட்டாலும் கூட ஆண்குறியில் பருக்கள் வர வாய்ப்புகள் உண்டு.

பருவமடைதல்

சிலருக்கு பருவமடையும் போது கூட இவ்வாறு பருக்கள் போன்ற சிறு சிறு புடைப்புகள் ஆண்குறியில் தோன்ற வாய்ப்புகள் இருக்கின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சரும மெழுகுசுரப்பி (Sebaceous Glands)

வயது வந்தோர் மத்தியில் சரும மெழுகு சுரப்பி அல்லது சிறு சிறு பருக்கள் தோன்றுவது மிகவும் சாதாரணம் தான் இதற்கு சிகிச்சை என்று ஏதும் தேவையில்லை. அதுவே, தானாக சரியாகிவிடும். என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சரும தொற்று

ஆண்குறி கீழ் பகுதியில் வளரும் மயிர்க்கால்களில் சரும தொற்றுகள் ஏற்பட்டாலும் இவ்வாறு பருக்கள் தோன்றலாம். அதற்கு மருத்துவரிடம் சென்று ஆண்டி-பயாடிக் பயன்படுத்தினாலே போதுமானது. சில சமயங்களில் அதுக் கூட தேவையில்லை, தானாக சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள்.

உடலுறவுக் கொண்டிருந்தால்

ஒருவேளை உடலுறவு கொண்ட பிறகு இவ்வாறு ஆண்குறி பகுதியில் பருக்கள் தென்பட்டால் அது ஹெர்பெஸ் (herpes) எனும் பாலியல் தொற்று பாதிப்பாக இருக்கலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள துவங்குங்கள்.

சுய இன்பம் காரணமா?

சிலர் சுய இன்பம் கொள்வதால் தான் ஆண்குறியில் பருக்கள் ஏற்படுகின்றன என தவறாக எண்ணுகிறார்கள். ஆனால், அப்படி ஏதும் இல்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.