Home உறவு-காதல் Tamil X romance ஆண்களே இது உங்களுக்குத்தான்… மனைவி அம்மா ரெண்டு பேருக்கும் பிடிச்ச மாதிரி...

Tamil X romance ஆண்களே இது உங்களுக்குத்தான்… மனைவி அம்மா ரெண்டு பேருக்கும் பிடிச்ச மாதிரி எப்படி நடந்துக்கணும்?…

27

திருமணமான பல ஆண்களுக்கு தன் மனைவி மற்றும் தாயை சமாளிக்க பெரும் அவதிப்படுகிறார்கள். தாய் சொல்வதைக் கேட்பதா அல்லது மனைவி சொல்வதை கேட்பதா என்ற குழப்பம் இருக்கும். இதுதான் பல குடும்ப பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கும். தாயையும் விட்டுத்தர முடியாது. மனைவியையும் விட்டுத்தர முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியாமல் தான் எல்லா ஆண்களும் முழிபிதுங்கிப் போயிருக்கிறார்கள்.

பொதுவாக எல்லா தாய்களுக்குமே தனது மகன் திருமணத்திற்கு பிறகு தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என்ற பயம் இருக்கும். இதை சில அம்மாக்கள் சமன் செய்து நடந்து கொள்வார்கள். சிலர் இதில் தடுமாறுவார்கள்.

மனைவி என்பவள் உங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள அவரின் சொந்த வீட்டை விட்டுவிட்டு உங்களை நம்பி மட்டுமே உங்களுடன் வந்தவர். உங்களது வாழ்க்கை முழுவதும் உங்களுடன் வாழப்போகும் துணை உங்கள் மனைவி மட்டும் தான். புகுந்த வீட்டில் தன் கணவனின் அன்பை பெற வேண்டும் என்ற ஆர்வமும், பயமும் உங்கள் மனைவிக்கும் இருக்கும்.

இந்த இரு உறவுகளுக்குமே ஆண்கள் மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். யாரையும் யார் முன்பும் குறைத்தோ அல்லது குறை கூறியோ பேசக்கூடாது.

இதுவரை நீங்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. உங்கள் மனைவி வாழ்ந்த சூழ்நிலை வேறு. எனவே திருமணத்திற்கு முன்பாகவே உங்கள் மனைவி, அவரது நண்பர்கள், அவரது வேலை, மற்றும் அவருக்கு பிடித்தது பிடிக்காதது என அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களது மனைவியை புது வீட்டில் பயம் இல்லாமல் வாழ வைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி உங்கள் அம்மாவிடமே அறிவுரை கேளுங்கள்.

சமையலறை தான் சண்டை வருவதற்கான முக்கிய இடமே. உங்கள் அம்மா உங்களுக்காக வழக்கம் போல ஆசையாக சமைப்பார். உங்கள் மனைவிக்கும் உங்களுக்கு பிடித்ததை சமைத்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருவரது சமையலையும் ஒரே மாதிரி பாராட்டுங்கள்.

ஒருவரது சமையலை மற்றொருவர் முன்பு பாராட்ட வேண்டாம். பாரட்டுவது என்றால் தனியாக பாராட்டுங்கள். பூ வாங்கி வருவது என்றால் கூட இருவருக்கும் வாங்கி கொடுங்கள்.

உங்கள் தாய் மற்றும் மனைவியிடம் பேச குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். இருவரிடமும் தனித்தனியாக பேசுங்கள்.

தனியாக இருக்கும் போது ஒருவரை பற்றி மற்றொருவரிடம் புகழ்ந்து அல்லது அதிகமாக பேசாதீர்கள்.

உங்கள் மனைவியின் முன்பு அம்மாவிடமும் உங்கள் அம்மாவின் முன்பு மனைவியிடமோ கோபப்பட்டு சத்தம் போடாதீர்கள்.

அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டால், நீங்கள் ஒருவருக்கு மட்டும் சாதகமாக ஒருபோதும் பேச வேண்டாம். இருவரது சண்டையையும் தீர்த்து வைக்கத் தெரிந்தால் சண்டையில் தலையிடுங்கள். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.