Home ஆண்கள் ஆணுறுப்பின் சராசரி அளவும் – ஆய்வு தகவல்களும்

ஆணுறுப்பின் சராசரி அளவும் – ஆய்வு தகவல்களும்

88

c3நிறைய ஆண்களுக்கு இந்திய ஆண்களின் ஆணுறுப்பின் சராசரி அளவு பற்றி தெரியாததால் தான், அவர்களது அளவோடு ஒப்பிட்டு மன கவலை அடைகின்றனர். இந்த ஆய்வுன் மூலம் அதற்கான தீர்வும், பதில்களும் கிடைத்திருப்பதாய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்…

ஆய்வில் பங்கெடுத்தவர்கள்
“செக்சுவல் ஹெல்த்” என்ற மையம் நடத்திய ஆய்வில் 1670 இந்திய ஆண்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்கள் மத்தியில் இந்திய ஆண்களின் ஆணுறுப்பை பற்றி பெரிய அளவில் ஓர் சர்வே எடுக்கப்பட்டது.

சராசரி ஆணுறுப்பு அளவு
இந்திய ஆண்களின் சராசரி ஆணுறுப்பு அளவு 5.54 அங்குல நீளம் மற்றும் 3.11 அங்குல சுற்றளவு என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களின் எதிர்பார்ப்பு
52% இந்திய ஆண்கள் அவர்களது ஆணுறுப்பு நீளமாக இருக்க வேண்டும் என்றும், 34% இந்திய ஆண்கள் அவர்களது ஆணுறுப்பு தடினமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆணுறுப்பு சார்ந்த கவலை
மூன்றில் ஒரு ஆண் இந்தியாவில் ஆணுறுப்பின் அளவு குறித்து கவலையடைகிறார்கள். இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பெரும்பாலான ஆண்கள் இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சந்தேகங்களை போக்கிக் கொள்ள உதவியது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆணுறுப்பை அதிகரிக்க முயற்சி
இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களில் 10ல் ஒரு நபர் அவர்களது ஆணுறுப்பை பெரிதாக்கிக் கொள்ள ஆன்லைனில் ஏதேனும் மருந்து மாத்திரை கிடைக்குமா என்று தேடியுள்ளனர் என்ற விஷயமும் தெரிய வந்துள்ளது.

சாராசரி அளவு சதவீத கணக்கீடு
77% ஆண்கள் அவர்களது ஆணுறுப்பின் அளவு 5.54 அங்குல நீளம் என்று தெரிவித்துள்ளனர். இதில் 5.1 – 6 அங்குல நீளம் ஆணுறுப்பு இருப்பது இந்திய ஆண்களின் சராசரி அளவு என்று தெரியவந்துள்ளது. 32.49% நபர்களுக்கு 3.1 – 5 அங்குலமும், 16.69% நபர்களுக்கு 6.1 – 7 அங்குல நீளமும், 3.76% ஆண்களுக்கு மூன்று அங்குலத்திற்கு குறைவாகவும் ஆணுறுப்பின் அளவு இருக்கிறது.

மைக்ரோ பெனிஸ் எனும் பாதிப்பு
மூன்று அங்குலத்திற்கு குறைவான ஆணுறுப்பு அளவு கொண்டுள்ளதை மைக்ரோ பெனிஸ் எனும் பாதிப்பு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவரை அணுகுவதில்லை
ஆணுறுப்பு சார்ந்த பிரச்சனை இருக்கும் ஆண்களில் இருவரில் ஒருவர் தான் மருத்துவரை அணுகி தீர்வு காண்கிறார்கள். மற்றவர்கள் இதைப் பற்றி வெளியில் கூற சங்கோஜம் அடைந்து தீர்வு பெற வழியிருந்தும் கூட அதற்கு மறுத்து வருகிறார்கள் என்ற தகவலும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.