Home சமையல் குறிப்புகள் அசைவ உணவுக்கு முழுமையான மாற்று உணவு டோஃபு

அசைவ உணவுக்கு முழுமையான மாற்று உணவு டோஃபு

24

oAfLwk6Ztofuடோஃபு உணவுக்குத் தேவையான ஒரு அத்தியாவசியமான பொருள் தான். டோஃபுவின் ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் எண்ணற்றதாகவும் மற்றும் பல்வேறு சத்துக்கள் உள்ள சோயாபீன் பலவகை உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தத் தக்கதாகவும் இருக்கின்றன.சிலருக்கு சோயா அலர்ஜியை ஏற்படுத்தும், அவர்கள் டோஃபுவை ஒதுக்கி வைப்பது நலம்.

டோஃபு புரதங்கள் நிரம்பிய உணவுப்பொருள். அரை கோப்பை டோஃபுவில் 10 கிராம் புரதம் உள்ளது. 10 கிராம் புரதத்திலிருந்து 88 கலோரிகள் கிடைக்கிறது. இது மாமிச உணவை விட 45 கலோரிகள் மட்டுமே குறைவானது என்பதால், டோஃபுவை ஆரோக்கியமான உணவு எனலாம். டோஃபுவில் துத்தநாகம், இரும்பு, செலினியம், பொட்டாசியம் மற்றும் பல விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

இது மாமிச உணவிற்கு மிகவும் சரியான மாற்று சைவ உணவாக உள்ளது. மாமிசங்களை உண்பவர்களை விட, காய்கறிகளை சாப்பிடுபவர்கள் குறைவான அளவே புரதங்களை சாப்பிடுகிறார்கள் என்று தவறான கருத்து ஒன்றும் உண்டு. எனினும், தொடர்ச்சியாக மற்றும் போதுமான அளவு டோஃபுவை சாப்பிட்டால் புரத்ததின் அளவை ஈடு செய்ய முடியும் என்று ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. அளவற்ற சத்துக்களையும் மற்றும் மாமிசத்திற்கு மாற்றான சிறந்த சைவ உணவாகவும் இருப்பதால், சைவப் பிரியர்களுக்கு டோஃபு சத்தான உணவாகவே உள்ளது.

டோஃபுவில் பல்வேறு சத்துக்கள் இருந்தாலும், அது உடலுக்கு நன்மை தரும் சில விஷயங்களையும் கொண்டுள்ளது. மோசமான கொழுப்பினை குறைப்பது டோஃபுவின் முதன்மையான நன்மையாகும். மாமிசத்திற்கு பதிலாக நீங்கள் டோஃபுவை சேர்த்துக் கொண்டால், ட்ரைகிளைசெரைட்ஸ் மற்றும் மோசமான கொலஸ்ட்ராலின் அளவு வெகுவாக குறையும். டோஃபு மாதவிடாய் அறிகுறிகளிலிருந்து விடுதலை அளிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அது உங்களுடைய எலும்புகளை பலமுடன் வைத்திருந்து, மூப்படைவதை சற்றே தள்ளிப் போக வைக்கிறது.

எல்லாவற்றையும் விட, டோஃபு சில சேர்க்கைகளை வழங்குகிறது. டோஃபுவை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கு நலன்கள் பிரமிப்பூட்டுகின்றன. டோஃபுவில் உள்ள ஐஸோப்ளேவோன்ஸ்கள் மிகவும் அறியப்பட்ட ஆக்ஸிஜன் எதிர் (antioxidants) கூட்டுப்பொருள்களாகும்.

ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் உங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கின்றன. அதன் விளைவாக நீங்கள் சில ஆண்டுகள் இளமையானவராக தோற்றமளிப்பீர்கள். டோஃபுவை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோய், இதயக் கோளாறுகள் (Cardiovascular Diseases) மற்றும் எலும்பு புரை (Osteoporosis) ஆகியவற்றை தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவு டோஃபு சாப்பிட்டால், பெண்களின் முதுகெலும்பு வலுப்பெறும். இது போன்ற நன்மைகளால், டோஃபு ஆரோக்கியமான உணவாகவே உள்ளது.