நயன் உறவு முறிவு கூட ஒருவகையில் நாடகம் தானாம் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்
தன்னைப் பற்றி அப்படி, இப்படி என காதல் கிசுகிசுக்களை கொளுத்திப் போடுவதில் இங்குள்ள மேனேஜர் ஒருவருக்கும் அவரது சிஷ்யகோடி ஒருவருக்கும் பெருத்த பங்கிருப்பதாக சந்தேகப்படுகிறாராம் நயன்தாரா. சந்தர்ப்பம் வரும்போது வைத்துக் கொள்கிறேன் அவர்களை என்று அனல் கக்குகிறாராம் நயன்.
இதற்கிடையில் இன்னொரு தகவலும் உலா வருகிறது கோடம்பாக்கத்தில். பிரபுதேவா- நயன்தாரா ஃபைட்டே ஒரு நாடகம்தான் என்பது தான் அந்த றெக்கை முளைத்த செய்தி. ( இது யார் கொளுத்தியது என்பது தெரியவில்லை..!!)ஆமாம்… நயன்தாராவின் பேங்க் பேலன்ஸ், படு பாதாளத்துக்கு இறங்கிப் போயிருக்கிறதாம்.
இப்போதைக்கு நடிப்பில் இறங்கி பத்து இருபது கோடியை தேற்றினால்தான் உண்டு என்பதாலும், பிரபுதேவாவுடனான உறவு தொடர்கிற பட்சத்தில் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதாலும் இருவரும் டிராமா ஆடுவதாக கிசுகிசுக்கிறார்கள். அட அப்படியா அம்மணி..!









