Published On: Tue, May 15th, 2012

ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம் .. அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா

மேற்கொண்டு எந்த கிசுகிசுவுக்கும் வேலை வைக்காமல், முன்னணி நடிகை அனுஷ்கா தனது காதல் விவகாரத்தை பளிச்சென்று அறிவித்துள்ளார்.

அனுஷ்காவையும் தெலுங்கு நடிகர் கோபி சந்தையும் இணைத்து ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள். தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் கிறிஷ்ஷுடன் அனுஷ்கா காதல் வயப்பட்டுள்ளதாக தகவல் கசிந்தது. இதனை அனுஷ்காவே உறுதிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கில் ஹிட்டான வேதம் படத்தை இயக்கியவர் கிறிஷ். தற்போது தமிழில் அதே படத்தை வானம் என்ற பெயரில் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இரண்டு படங்களிலும் அனுஷ்காதான் நாயகி.

வேதம் படப்பிடிப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்ததாம். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

சமீபத்தில் இதுகுறித்து தன்னிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், “ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம், கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறோம்,” என்றாராம் பளிச்சென்று அனுஷ்கா.

Leave a comment

You must be Logged in to post comment.