ஆண்-பெண் உடலுறவுக்கான சிறந்த நிலை எது?

உடலுறவுகொள்ள பல்வேறு நிலைகள் உண்டு எனப் படித்திருக்கிறேன். ஆனால், அவற்றில் எது சிறந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உடலுறவுக்கான சிறந்த நிலை எது என்பதை நீங்களாவது சொல்ல முடியுமா?

அவரவர் தேவை, உடல்நிலையைப் பொறுத்ததுதான் பாலியல் பொசிஷன். சாதாரண மனிதர்களுக்கு எல்லா பொசிஷனும் பொருந்தும் – அவரவர் விருப்பத்தைப் பொறுத்து அவர்களே அதைத் தேர்வு செய்யலாம். ஆனால், பிரத்தியேகத் தேவைகள் உள்ளவர்களுக்கென்றே சில குறிப்பிட்ட பொசிஷன்கள் உள்ளன.

உதாரணத்துக்கு, பிள்ளை பிறக்க வேண்டி பாலுறவு கொள்கையில் பெண் கால்களை உயர்த்தி ஆணின் இடுப்பையோ கழுத்தையோ சுற்றிப் பின்னிக் கொள்வது உசிதம்.

இடுப்பு வலி, எலும்புத் தேய்மானம் மாதிரி பிரச்னைகள் உள்ளவர்கள் என்றால் இடுப்பை வளைக்காமல் நின்ற நிலையில் புணர்வது உசிதம்.

கர்ப்பவதி பெண் என்றால் அவள் மீது பாரம் விழாதபடி, பெண் மேலே இருந்து புணரும் நிலை உசிதம்.

இரண்டு பேருமே உடல் பருத்தவர்களாக இருந்தால் பக்கவாட்டில் சாய்ந்தபடி புணர்வது உசிதம். இந்த பொசிஷன்கள் எல்லாம் தம்பதிகளின் தேவை, சௌகரியம், திருப்தி முதலியவற்றைப் பொறுத்தவை என்பதால் பரீட்சார்த்தம் செய்து பார்த்து பிறகு ஓகேவா, நாட் ஓகேவா என்று முடிவு செய்வது நல்லது.